1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2022 (20:05 IST)

பரத் வாணிபோஜனின் ‘லவ்’ த்ரில்லான டீசர்

love
பரத் வாணிபோஜனின் ‘லவ்’ த்ரில்லான டீசர்
பரத், வாணி போஜன் நடித்த ‘லவ்’ என்ற படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
பரத் நடிக்கும் 50வது படமான ‘லவ்’ என்ற படம் திரில்லர் கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தை ஆர்பி பாலா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஒரு சண்டையில் மனைவி வாணிபோஜனை பரத் கொன்று விட அதனால் ஏற்படும் விபரீதங்கள் அதன் பின் ஏற்படும் அடுத்தடுத்த திகில் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை என இந்த டீசரில் இருந்து தெரியவருகிறது. 
 
நீண்ட இடைவெளிக்கு பின்னர் பரத் நடித்துள்ள இந்த படம் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva