பாரதிராஜாவின் க்ளைமேக்ஸ் பிடிக்காமல் மாற்றிய பாக்யராஜ்… ரெண்டு க்ளைமேக்ஸுமே ஹிட்
இயக்குனர் பாக்யராஜ் கதை எழுதி பாரதிராஜா இயக்கிய திரைப்படம் ஒரு கைதியின் டைரி திரைப்படம்.
இயக்குனர் பாரதிராஜாவுக்கு உதவியாளராக பணியாற்றியவர் பாக்யராஜ். அதன் பின்னர் அவர் நடிகராகவும் இயக்குனராகவும் வளர்ந்துவிட்ட பிறகு மீண்டும் இருவரும் ஒரு படத்தில் இணைந்தவர். அந்த படம்தான் பாக்யராஜ் கதை எழுதி பாரதிராஜா இயக்கிய ஒரு கைதியின் டைரி.
இந்த படம் தமிழில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் இந்தியில் தன் இயக்கத்திலேயே அமிதாப் பச்சனை கதாநாயகனாக்கி இயக்கினார் பாக்யராஜ். தமிழ் வடிவத்தில் கதைக்கு பாக்யராஜ் சொன்ன க்ளைமேக்ஸ் காட்சியை வைக்காமல், புதியாக ஒரு க்ளைமேக்ஸ் காட்சியை வைத்து படமாக்கினார் பாரதிராஜா.
ஆனால் இந்தியில் படத்தை ரீமேக் செய்த பாக்யராஜ் வெற்றி பெற்ற அந்த க்ளைமேக்ஸை வைக்காமல் தான் முதலில் யோசித்த க்ளைமேக்ஸ் காட்சியையே படமாக்கினார். அந்த க்ளைமேக்ஸும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மிகப்பெரிய ஹிட் ஆனது. ஒரே கதைக்கு இரண்டு க்ளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு இரண்டுமே வெற்றி பெற்றது இரண்டு இயக்குனர்களின் திறமை பறைசாற்றுகிறது.