வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 8 ஜனவரி 2019 (11:00 IST)

சிறந்த நடிகைக்கான விருது வென்ற ராசிகண்ணா!

நடிகை ராசிகண்ணா  கடந்த ஆண்டு சிறப்பாக நடித்ததுக்கான 'பெஸ்ட் பெர்பாமர்'   ஜீ சினிமா விருதினை  வென்றார்.


 
'ஜீ சினிமா விருதுகள் 2018'  நேற்று பிரம்மாண்டமான முறையில் நடந்தது. மகேஷ்பாபு நடித்த பாரத் அனே நேனு படம் தென்னிந்தியாவின் சிறந்த படத்துக்கான விருதினை வென்றது. கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட நடிகைக்கான விருதினை நடிகை ராசிகண்ணா வென்றார். இவர் சமீபத்தில் வெளியான அடங்கமறு படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ரங்கஸ்தலம் படத்தில் நடித்த ராம்சரண் தேஜா சிறந்த நடிகருக்கான விருதினை வென்றார். சிறந்த திரைக்கதைக்கான விருதினை #Goodachari படம் வென்றது.

சம்மோகனம் படத்தில் நடித்த சுதிர் அதிதி ஜோடிக்கு பெஸ்ட் ரொமான்டிக் ஜோடி விருது வழங்கப்பட்டது.