வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (14:54 IST)

இணையத்தில் ட்ரோல் ஆகும் முத்தழகு சீரியல் வீடியோ!

விஜய் தொலைக்காட்சியின் சீரியல்கள் இப்போது இணையத்தில் அதிகளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் காட்சிகளின் தரம் இன்னமும் 1960 களில் எடுக்கப்பட்ட சினிமாக்களின் அளவிலேயே உள்ளது. பார்வையாளர்கள் ரசித்து பார்க்க ஒரு அறிவார்த்தமான காட்சியோ அல்லது கதாபாத்திரங்களோ தமிழ் சீரியல்களில் காணவே முடியாது. 1980 களில் வந்த படங்களின் கதைகளையே லேசாக மாற்றி எபிசோட்களை ஜவ்வாக இழுத்து ரசிகர்களை ஏமாற்றி வருகின்றன.

அப்படி எடுக்கப்படும் சீரியல்களின் சில காட்சிகள் இணையத்தில் அவ்வப்போது ட்ரோல் ஆவது உண்டு. சமீபத்தில் சன் தொலைக்காட்சியின் ரோஜா தொடரின் ‘முகமூடி வைத்து முகத்தை மாற்றும் காட்சி’ இணையத்தில் கலாய்க்கப்பட்டது. அந்த வகையில் இப்போது விஜய் தொலைக்காட்சியின் முத்தழகு எனும் சீரியலின் ப்ரோமா காட்சி ஒன்று ட்ரோல் ஆகி வருகிறது.

சீரியலின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி ஆகிய இருவரும் விருப்பம் இல்லாமல் குடும்ப நிர்ப்பந்தம் காரணமாக கல்யாணம் செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு நெருக்கத்தை உருவாக்க நினைக்கும் பாட்டி அவர்கள் கோயிலுக்கு செல்லும் போது வழியில் முள் ஒன்றை போடுகிறார். அதை முத்தழகு மிதித்து நடக்க முடியாமல் போனால் அவளின் கணவர் தூக்கி செல்வார். இதன் மூலம் அவர்களுக்குள் காதல் பிறக்கும் என்பது பாட்டியின் திட்டம். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த முள்ளை கதாநாயகன் மிதித்துவிட, முத்தழகு அவனைத் தூக்கிக் கொண்டு கோயில் படியேறி செல்கிறாள். இந்த ப்ரோமோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.