காத்திருப்பு முடிந்தது... இன்றிரவு ஒளிபரப்பாகும் ரஜினியின் சாகசம் - பியர் கிரில்ஸ் ட்வீட்!
ரஜினிகாந்த் - பியர் கிரில்ஸின் சாகச காட்டுப்பயணம் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
உலக புகழ்பெற்ற பியர் க்ரில்ஸின் காட்டு பயண சாகசமான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் இதுவரை கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் ஹாலிவுட் ஸ்டார்கள் வரை பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் முதன்முறையாக கலந்து கொண்ட இந்திய பிரபலம் பிரதமர் நரேந்திர மோடிதான். அதற்கு பிறகு தற்போது நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். பியர் க்ரில்ஸ் மற்றும் ரஜினிகாந்த் கந்ராடகாவில் உள்ள பந்திப்பூர் காட்டுக்குள் பயணித்தனர். சுமார் இரண்டு நாட்கள் நீண்ட இவர்களது பயணம் இன்று இரவு 8 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பட்ட உள்ளது என பியர் கிரில்ச் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனை காண ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர். பியர் கிரில்ஸின் சாகசத்தையும் ரஜினியின் மற்றொரு முகத்தையும் பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக இருவரின் ரசிகர்களும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.