திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (22:34 IST)

என் வாழ்க்கையே அதிசயமானது – ரஜினிகாந்த் ’நெகிழ்ச்சி ‘

என் வாழ்க்கையே அதிசமானது – ரஜினிகாந்த் ’நெகிழ்ச்சி ‘

உலகம் முழுவதும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போதைய சீசன்கள் பிரபலங்களுடன் காடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். 

இதற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் பந்திப்பூர் தேசிய பூங்காவின் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது. அன்று முதல் ரஜினி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்களிடையே ஆவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மார்ச் 23 ஆம் தேதி ஒளிபரப்பப்படுவதாக டிஸ்கவரி சேனல் ஏற்கனவே அறிவித்தது.  

இதனைத்தொடர்ந்து இப்போது இந்த நிகழ்ச்சியின் 2 நிமிட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில்,கர்நாடக மாநிலம் பந்தியூர் புலிகல் காப்பகத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் வரும் வீடியோ வரும் 23 ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் பியர் கிரில்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு ரஜினி பதிலளிப்பது போன்று  உள்ளது.

பியர் கிரில்ஸ் கேட்கும் கேள்விக்கு ரஜினி, என் முழு வாழ்க்கையே அதிசயம் ஆனது என்றும் இந்த டிவி நிகழ்ச்சியே அதற்கு மிகச்சிறந்த உதாரணம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு முன் தான் டிவி சேனலில் கலந்துகொள்வேன் என நினைத்துப்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளதாக தெர்வித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி ரஜினியின் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம்தான் .