1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (22:50 IST)

'பத்து தல' படத்தின் 2 வது சிங்கில் ''நினைவிருக்கா ''ரிலீஸ்...

pathu thala
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல'படத்தின் 2 வது சிங்கில் இன்று வெளியாகியுள்ளது.

கன்னட சினிமாவில் வெளியான மப்டி படம் தமிழில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தை  ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தை கிருஷ்ணா இயக்கி வருகிறார்.   நடிகர் சிம்பு மற்றும் கெளதம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து, வரும்  மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆடியோ வெளியீடு வரும் மார்ச் 18 ஆம் தேதி நடக்க உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்துக்கான பின்னணி இசைப் பணிகளை இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தொடங்கியுள்ளார். இவது இசையில்  இப்படத்தில் இடம்பெற்ற  ஒரு பாடல்  வெளியாகி இணையதளத்தில் வைரலானது.

இந்த நிலையில்,  இப்படத்தின் 2வது சிங்கில் நினைவிருக்கா  என்ற பாடல் வரும்  இன்று வெளியாகும்  என அறிவிக்கப்பட்டதுபோல் இன்று மாலையில் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரது மகன் அமீன்  இப்பாடலை பாடியுள்ளார். கபிலர் வரிகள் எழுதியுள்ளார்.

இளைஞர்களையும் காதலர்களையும் கவர்ந்துள்ள இப்பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இன்று மாலை வெளியான இப்பாடலை இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.