செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 11 மே 2018 (08:19 IST)

இன்று வெளியாகும் படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த  பின்னர் ஒவ்வொரு வாரமும் மூன்று திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிவந்த நிலையில் இந்த வாரம் மட்டும் இரும்புத்திரை, பாஸ்கர் ஒரு ராஸ்கல், இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் நடிகையர் திலகம் ஆகிய நான்கு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த படங்களின் புரமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று, தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு முன்பதிவுகளும் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் இன்று ரிலீஸ் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தாலும் இந்த தேதி மாற்றத்திற்கான காரணத்தை படக்குழுவினர் அறிவிக்கவில்லை
 
மேலும் இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று சென்னையில் உள்ள ஒரு பிரிவியூ தியேட்டரில் திரையிடப்பட்டது. பத்திரிகையாளர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை பெற்ற இந்த படம் திடீரென ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
அரவிந்தசாமி, அமலாபாலா, நாசர், நைனிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கியிருந்தார். இந்த படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற 'பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது