புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 27 ஜனவரி 2019 (14:41 IST)

வந்து கொண்டே இருக்கும் பணம் – இன்னும் சாகாத ஜெ. வங்கிக் கணக்கு !

ஜெயலலிதா மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் அவரது வங்கிக் கணக்குகளுக்கு இன்னும் பணம் வந்துகொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால் இன்னமும் அவரது வங்கி கணக்குகளில் கொடநாடு எஸ்டேட் உட்பட வர்த்தக மற்றும் வசிப்பிட சொத்துகளிலிருந்து அவரது வங்கிக் கணக்குக்கு வாடகைப் பணம் வந்துகொண்டிருப்பதாகத் வருமான வரித்துறையிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே அவரது நான்கு சொத்துகளையும் இணைப்பிற்குப் பிறகு அந்த சொத்துகள் தொடர்பாக வருமானம் தொடர்பாக எந்த செயல்பாடுகளும் இருக்கக் கூடாது என வருமானத்துறை அவரது பதிப்பாளர்கள் தெரிவிக்கப்பட்டுளது. மேலும் ஜெயலலிதாவுக்கும் அவரது வரிப்பாக்கிகள் குறித்து வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஜெயலலிதா வரிப்பாக்கியை செலுத்தி சொத்துகளை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.