கைதி படத்தை ரீமேக் செய்யவோ, இரண்டாம் பாகம் எடுக்கவோ தடை! ஏன் தெரியுமா?
கார்த்தி நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கைதி படத்தின் கதை தன்னுடையது என கேரளாவில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான கார்த்தியின் கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை இப்போது இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. தமிழில் தயாரித்த எஸ் ஆர் பிரபுவே இந்தியிலும் தயாரிக்கிறார். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் தான் சிறையில் இருந்ததை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று 2007 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவிடம் சொன்னதாகவும், கூறியுள்ளார். மேலும் அந்த கதையை படமாக எடுக்க 10000 ரூபாய் முன்பணமாக கொடுத்தாதாகவும் கூறியுள்ளார். நான் இரண்டாம் பகுதியைதான் அவர் கைதி என்ற பெயரில் எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அந்த படத்தை தற்போது ஊரடங்கு சமயத்தில்தான் பார்த்ததாகவும் கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கைதி படத்தை ரீமேக் செய்யவும், அதன் இரண்டாம் பாகங்களை எடுக்கவும் தடை விதித்து எஸ் ஆர் பிரபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.