திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 டிசம்பர் 2023 (11:54 IST)

அக்கவுண்டில் இருந்ததே ரூ.2 லட்சம் தான்.. அனைத்தையும் மக்களுக்கு கொடுத்த பாலா..!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலா தனது அக்கவுண்டில் இருந்த இரண்டு லட்ச ரூபாயை எடுத்து 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  

விஜய் டிவி பிரபலம் பாலா ஏற்கனவே ஆம்புலன்ஸ் தனது சொந்த செலவில் வாங்கி உதவி செய்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னையில் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாலா உதவி செய்ய முன்வந்துள்ளார்.

தான் சென்னைக்கு முதன் முதலாக வந்த அனகாபுத்தூர் பகுதிக்கு சென்ற அவர் அங்கு உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். அவருடைய அக்கவுண்டில் மொத்தமே 2 லட்சம் ரூபாய் தான் இருந்ததாகவும் அதை 200 குடும்பங்களுக்கு பகிர்ந்து அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ஆம்புலன்ஸ் உட்பட பல்வேறு உதவிகள் செய்துள்ள பாலா தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Edited by Mahendran