1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2023 (09:07 IST)

1000 எபிசோட்களை வெற்றிகரமாக கடந்த பாக்கியலட்சுமி சீரியல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் கோபி கதாபாத்திரம் சமூகவலைதளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு மீம் மெட்டீரியல் ஆக இருந்து வருகிறது.

இந்த சீரியலில் கோபி பாக்யாவை திருமணம் செய்துகொண்டும், ராதிகாவைக் காதலித்துக் கொண்டும் இருக்கும் விதமாக உருவாக்கப்பட்ட காட்சிகள் கோபியை ஒரு ப்ளே பாய் போல சித்தரித்தன. இது இரு தரப்பிற்கும் தெரியாமல் கோபி தில்லு முல்லு வேலைகள் செய்து தப்பித்து வந்தார்.

பாக்கியா இப்போது தன் கணவனை நம்பிக்கொண்டு இருக்காமல், தானாக தன்னுடைய மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தைக் காப்பாற்ற வீரமங்கையாக களத்தில் இறங்கியுள்ளார்.

இப்படி வைரலாக சென்று கொண்டிருந்த பாக்கியலட்சுமி சீரியல் இப்போது வெற்றிகரமாக 1000 எபிசோட்களைக் கடந்துள்ளது. இதையடுத்து படக்குழுவினர் படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டி இதைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.