விஜய் சேதுபதி காத்ரினா கைஃப் நடிக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் அப்டேட்!
தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர். அவர் இயக்கிய பட்லாபூர் மற்றும் அந்தாதூன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதிலும் அந்தாதூன் உலகளவில் புகழ் பெற்ற படமாக மாறியது. இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்போது அவர் விஜய் சேதுபதி மற்றும் காத்ரினா கைஃப் ஆகியோர் நடிப்பில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. படத்தில் தமிழ் பேசும் நபராகவே விஜய் சேதுபதி நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இவரின் உரையாடல்களை காத்ரினா கைஃபுக்கு மொழி பெயர்த்து சொல்லும் கதாபாத்திரத்தில் நடிகை தீபா வெங்கட் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த படம் முதலில் கிறிஸ்துமஸ் 2022 ஆம் ஆண்டை ஒட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு ஜனவரி 12 ஆம் தேதி பேன் இந்தியன் ரிலீஸாக வெளிவருகிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகிறது. இதை விஜய் சேதுபதி தன்னுடைட டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.