1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 2 மார்ச் 2025 (07:44 IST)

தமிழ் சினிமாவில் எந்த படமும் படைக்காத சாதனை.. கலக்கிய ‘குட் பேட் அக்லி’ டீசர்!

தமிழ் சினிமாவில் எந்த படமும் படைக்காத சாதனை.. கலக்கிய ‘குட் பேட் அக்லி’ டீசர்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. அஜித் மூன்று விதமான கெட்டப்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தின் டீசர் ரிலீஸானது. வேகமாக ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பன்ச் வசனங்களை அடக்கி  படத்தொகுப்பு செய்யபப்ட்ட இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

வெளியான 24 மணிநேரத்தில் 3.2 மில்லியன் (அதாவது 3.2 கோடி) பார்வைகளைப் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் எந்தவொரு படத்தின் டீசரும் படைக்காத சாதனை இது எனப் படக்குழு பெருமிதமாகப் பகிர்ந்துள்ளது.