வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 8 ஆகஸ்ட் 2020 (08:06 IST)

சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு பேபி ரசிகையா... செல்லம்மா பாடலுக்கு என்ன ஆட்டம்!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விஜய்யை போலவே நிறைய குழந்தைகள் ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் வெளிவரும் நாளில் குடும்பத்துடன் திரையரங்கிற்கு செல்வதற்கு முக்கிய காரணம் அது தான். காமெடி ,காதல், குடும்ப பாசம் என அணைத்து அம்சங்ககளையும் உள்ளிறக்கி ரசிகர்களை திருப்தி படுத்தி வருகிறார்.

அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்ப்போது  இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குஅனிருத் இசையமைத்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் ’’செல்லம்மா செல்லம்மா’’’ என்ற பாடல் யூடியூபில் வெளியாகி எஸ் கே ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பேபி ரசிகை ஒருவர் செல்லம்மா பாடல் டிவியில் ஒளிபரப்பானதும் கியூட்டாக ஆட்டம் போடுகிறார். இந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கியுள்ளனர்.