1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (10:47 IST)

பாபா படத்தின் க்ளைமேக்ஸ் மாற்றம்… ட்ரோல்களில் இருந்து தப்பிய ரஜினி

பாபா படத்தின் ரி ரிலீஸில் க்ளைமேக்ஸ் காட்சி மாற்றப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் நேற்று பாபா படம் ரி ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் படத்தில் இருந்து அரைமணிநேரம் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து பல திரைகளில் நேற்று வெளியான நிலையில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். மற்ற பொதுவான சினிமா ரசிகர்கள் இந்த படத்துக்கு ஆதரவளிக்கவில்லை. இந்நிலையில் படத்தின் சர்ச்சைக்குரிய க்ளைமேக்ஸ் காட்சி இப்போது மாற்றப்பட்டுள்ளது.

முதல் ரிலீஸில் ‘பாபா கதாபாத்திரம் இமயமலைக்கே திரும்பி சென்றுவிடும் முடிவை எடுக்கையில் முதலமைச்சர் சுட்டு கொல்லப்படுவதால், மீண்டும் தமிழகத்திலேயே இருக்க முடிவெடுப்பார். இது ரஜினியின் அரசியல் வருகையை பற்றி கூறும் விதமாக அமைந்தது.
ஆனால் இப்போது ரஜினிகாந்த் இமயமலையில் இருந்து திரும்பி வருவதாக இருக்கும் காட்சிகள் மட்டுமே உள்ளன. அரசியல் சம்மந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளன.