பாகுபலி 2 படத்தின் தமிழக உரிமை 45 கோடிகள்

பாகுபலி 2 படத்தின் தமிழக உரிமை 45 கோடிகள்


Sasikala| Last Modified வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (16:20 IST)
பாகுபலியை கபாலி முந்தியது என்று நாம் பெருமைப்பட்டாலும் உண்மை வேறுவிதமாகவே உள்ளது. சுமார் 600 கோடிகளுக்கு மேல் வசூலித்து பாகுபலியே இன்னும் முதலிடத்தில் உள்ளது.

 
 
பாகுபலி 2 2017 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு முடியும் முன்பே அதன் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளது. 45 கோடிகள் இந்த உரிமைக்காக தரப்பட்டுள்ளது. 
 
கபாலியின் ஆந்திரா, தெலுங்கானா உரிமையைவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :