அயலான் ரிலீஸில் எந்த மாற்றமும் இல்லை… இயக்குனர் தரப்பு விளக்கம்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளில் சிக்கி ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. இப்போது 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தில் நிறைய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளும், வி எஃப் எக்ஸ் காட்சிகளும் உள்ளதால் அதன் பணிகள் முடிவதில் தாமதம் ஆகி வருவதாக தெரிகிறது. அதனால் தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆவது சந்தேகம்தான் என சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் அதை இயக்குனர் ரவிகுமார் தரப்பு மறுத்துள்ளது. திட்டமிட்டப்படி வேலைகள் நடந்து வருவதாகவும், தீபாவளிக்குப் படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் எனவும் கூறியுள்ளனர்.