1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 30 மே 2023 (16:37 IST)

ஜூன் மாதத்தில் அயலான் டீசர்.. தொடங்கியது டீசர் பணிகள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளில் சிக்கி ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. இப்போது 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது டீசர் ரிலீஸுக்கான வேலைகளை அயலான் படக்குழு தொடங்கியுள்ளதாம். டீசருக்கான காட்சிகளுக்கான கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருவதாகவும் ஜுன் மூன்றாவது வாரத்தில் இந்த டீசர் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.