1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 24 ஜனவரி 2024 (09:53 IST)

குழந்தைகள் கொண்டாடிய ஏலியன் அயலானின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

கேப்டன் மில்லர், அயலான், மிஷன் 1 மற்றும் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் ரிலீஸான நிலையில் அயலான் படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. படத்தில் இடம்பெற்ற வி எஃப் எக்ஸ் மற்றும் ஏலியன் சம்மந்தப்பட்ட காட்சிகள் குழந்தைகளை கவர்ந்தது. ஆனால் பெரியவர்களின் பொறுமையை இந்த படம் பல இடங்களில் சோதித்தது.

ஆனாலும் பொங்கல் ரிலீசில் இந்த படம் தான்  வின்னர் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த படத்தின் அதிக பட்ஜெட் காரணமாக பெரிதாக லாபம் எடுக்க முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட உள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் இப்போது கசிந்துள்ளது. அதன்படி சன் நெக்ஸ்ட் தளத்தில் இந்த படம் பிப்ரவரி 16 முதல் ஸ்ட்ரீம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.