1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (00:25 IST)

''மாநாடு ''படத்தின் இயக்குநர் வெங்கட் பிரவுக்கு விருது

மாநாடு படத்தின் இயக்குநர் வெங்கட் பிரவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மாநாடு படத்தின் இயக்குநர் வெங்கட் பிரவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டுடியோ பிளிக்ஸ் என்ற   நிறுவனம் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சிறந்த திரைக்கதைக்கான விருது மா நாடு படத்தின் இயக்குநரும்,  திரைக்கதை ஆசிரியருமான வெங்கட் பிரபுவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதற்கு இயக்குநர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.