தமிழகத்தில் 71.90 சதவீதம் வாக்குப்பதிவு: இந்த மாவட்டம் தான் முதலிடம்!!!!

Last Modified வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (19:15 IST)
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 71.90 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று வேலூர் தவிர 38 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. காலை முதல் பொதுமக்கள் விறுவிறுப்பாக வாக்களித்தனர்.
 
இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரையில் 38 பாராளுமன்ற தொகுதிகளில் 71.90 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 80.49 சதவீத வாக்குகள் பதிவாகி தருமபுரி முதலிடத்தில் உள்ளது. 56.34 வாக்குகள் பதிவாகி தென் சென்னை கடைசி இடத்தில் உள்ளது. 
 
18 சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரையில் 82.26 சதவீதம் வாக்குகள் பதிவாகி சோளிங்கர் முதலிடத்திலும் 64.14 சதவீத வாக்குகள் பதிவாகி பெரம்பூர் கடைசி இடத்திலும் உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :