வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (20:21 IST)

சுயசரிதை எழுதும் பாப் உலகின் இளவரசி!

spears
தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதவுள்ளதாக  பிரபல பால் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். 90 கால கட்டங்களில் இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது என்ற அளவுக்கு உலகம் முழுவதும் இவர் பாடிய பாடல்களும், ஆடியோ கேசட்டுகளும் விற்பனையில் சாதனை படைத்தனர்.

பாப் இசையுலகின் இளவரசி என அழைக்கப்படும் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது சுயசரியதைப் புத்தகத்தை எழுதுவதாக உறுதியளித்துள்ளார்.  மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இதுகுறித்துக் கூறியுள்ளார். அதில், என் தந்தையின் கட்டுப்பாட்டடில் கடந்த ஆண்டு வரை இருந்தேன் ஆனால் நீதிமன்ற உத்தரவால் விடுவிக்கப்பட்டேன்.

மேலும், இவரது சுயசரிதையை எந்தப் பதிப்பகம் வெளியிடப்போகிறது என்பது தெரியவில்லை. ஆனால், சைமன் அண்ட் ஷஸ்டர் என்ற பதிப்பகம் 15 மில்லியன் டால9 சுமார் ரூ.112) கோடி மதிப்பில் ஓப்பந்தம் செய்துகொண்டுள்ளாதாக தக வல் வெளியாகிறது. இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.