1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:52 IST)

பாலிவுட்டிலும் வேலையை காட்டிய அட்லி – எந்த படத்தின் காப்பி எனக் கண்டுபிடித்து திருப்பி அனுப்பிய ஷாருக் கான்!

இயக்குனர் அட்லி பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு படம் இயக்க இருந்த வாய்ப்பு என்ன ஆனது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அட்லி இதுவரை இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தாலும், அந்த படங்கள் எல்லாம் ஏதோவொரு பழைய தமிழ் சினிமாக்களில் இருந்து உருவப்பட்டது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் பிகில் வெற்றிக்குப் பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து படம் இயக்கும் முனைப்பில் மும்பையில் முகாமிட்டார் அட்லி.

இதற்காக கதை செய்து ஷாருக்கானிடம் அவர் சொல்லியுள்ளார். கதை முழுவதையும் கேட்ட ஷாருக் கான் , இது கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தின் கதை போலவே இருப்பதாக சொல்லி அவரைத் திருப்பி அனுப்பியுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் பாலிவுட்டுக்கு சென்றும் தன் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லையே என கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.