இதை நான் எப்போது பார்த்தாலும்... பிகில் நடிகை கொடுத்த பரிசில் மெய்சிலிர்த்த விஜய்

Papiksha Joseph| Last Updated: வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (14:30 IST)

தமிழ் சினிமாவின் தலையாய நடிகரான தளபதி விஜய் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஆரம்பம் காலத்தில் இருந்தே படி படியாக தனது அயராது உழைப்பாலும் விடா முயற்சியாலும் முன்னுக்கு வந்தவர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

இன்று இவரை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும் அளவிற்கு அவர் உச்ச நடிகராக விளங்கி வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் பிகில் படத்தில் நடித்த போது அந்த அணியில் நடித்த நடிகை ஆதிரை சௌந்தரராஜன் விஜய் பிறந்தநாளுக்கு பிகில் படத்தை போன்றே மணிப்பூர் மற்றும் தமிழ்நாடு அணி வீராங்கனைகள் விளையாடுவது போன்று அவரே உருவாக்கிய கேம் இயந்திரம் ஒன்றை பரிசளித்துள்ளார்.

அதை கண்டதும் விஜய் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் பார்த்தாராம். அத்துடன் விஜய், " இது உண்மையாகவே பிகில் படத்தின் டீம் போன்ற ஒரு உணர்வு கொடுத்தது. இந்த பரிசை நான் எப்போது பார்த்தாலும் பிகில் படத்தின் ஞாபகம் வரும்" என்று அவர் கூறி நன்றி சொன்னதாக
நடிகை ஆதிரை தெரிவித்துள்ளார் .


இதில் மேலும் படிக்கவும் :