புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 மே 2021 (08:13 IST)

எல்லாம் தயார்… ஷாருக் பட ஷூட்டிங்குக்கு தயாரான அட்லி!

ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்க உள்ள படத்துக்கான திரைக்கதை பணிகள் ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகின்றன.

இயக்குனர் அட்லி ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கி அதன் மூலம் கோலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து அவர் ஷாருக் கான் படத்தை இயக்கும் வாய்ப்புக்காக சமீபகாலமாக பாலிவுட்டில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் அவர் இயக்கும் படத்துக்கான வேலைகள் மும்முரமாக இப்போது நடைபெற்று வருகின்றன.

தொடர் தோல்விகளால் பாதிக்கப்பட்டுள்ள ஷாருக்கின் சினிமா கேரியர் இப்போது ஒரு கட்டாய வெற்றிக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் அட்லியின் திரைக்கதையில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வடிவம் ஷாருக் கானுக்கும் மிகவும் பிடித்துவிட்டதாம். இதனால் மும்பையில் கொரோனா பாதிப்பு குறைந்ததும் உடனடியாக படப்பிடிப்பு தொடங்கும் பணிகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது.