அட்லியின் சம்பளம் இத்தனைக் கோடிகளா? வாய்பிளக்கும் கோடம்பாக்கம்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதையடுத்து இப்போது படத்தின் பிஸ்னஸ் மற்றும் ப்ரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பிரிவியூ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து அட்லி தமிழில் ஒரு படம் இயக்குவார் என சொல்லப்படுகிறது. அந்த படத்தில் விஜய் நடிக்கலாம் என சொல்லப்படும் நிலையில் அந்த படத்தை இயக்க அட்லிக்கு சம்பளமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் 50 கோடி என நிர்னயித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது கோலிவுட்டில் இதுவரை எந்த இயக்குனரும் வாங்காத சம்பளம் எனவும் சொல்லப்படுகிறது.