திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (10:07 IST)

அரபிக் குத்து பாடலுக்கு மனைவியோடு நடனமாடிய அட்லி!

சமீபத்தில் வெளியாகி உலகெங்கும் ஹிட்டாகியுள்ளது பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல்.

நெல்சன் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் கூட்டணியில் கல்யாண வயசு, செல்லம்மா ஆகிய பாடல்களின் வெற்றிக்குப் பின்னர் இப்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் உருவாகியுள்ள அரபிக்குத்து பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. 50 கோடிக்கும் அதிகமானோர் இந்த பாடலை பார்த்துள்ளனர்.

இந்நிலையில் இந்த பாடலின் நடன அசைவுகளை ஆடிப் பலரும் தங்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இப்போது இயக்குனர் அட்லி தன் மனைவி நடிகை ப்ரியாவோடு இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.