அதர்வா படம் மார்ச் 29ஆம் தேதி ரிலீஸ் : அதற்குள் ஸ்டிரைக் முடிந்துவிடுமா?

CM| Last Updated: வெள்ளி, 2 மார்ச் 2018 (22:35 IST)
அதர்வா நடித்துள்ள ‘செம போத ஆகாத’ படம் மார்ச் 29ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செம போத ஆகாத’. அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், மிஸ்தி மற்றும் அனைக்கா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மேலும், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரவீன் கே.எல். எடிட் செய்துள்ளார். கிக்காஸ்  எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் அதர்வாவே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படம் மார்ச் 29ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
க்யூப் மற்றும் யு.எப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டலின் அதிக கட்டணத்தை எதிர்த்து நேற்று முதல் புதுப்படங்களின் ரிலீஸ் கிடையாது என அறிவிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகிறது. எனவே, மார்ச் 29ஆம் தேதிக்குள் பிரச்னை முடிவுக்கு வந்து புதுப்படங்கள் ரிலீஸாகிறதா என்பதைப் பொறுத்திருந்து  பார்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :