1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2018 (22:20 IST)

மார்ச் 1 முதல் ஸ்டிரைக்; தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

மார்ச் 1 முதல் QUBE மற்றும் UFO-ஐ எதிர்த்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் அறிவித்துள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தலைமையில் நடைப்பெற்ற பொது கூட்டத்தில், திரையரங்குகளில் படங்களை டிஜிட்டல்  முறையில் ஒளிபரப்பும் QUBE மற்றும் UFO நிறுவனங்கள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதால், இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம்  அறிவித்துள்ளது.
 
இதன் முலம் மார்ச் 1 முதல் தமிழ் படங்களின் படப்பிடிப்பு எதுவும் நடக்காது, மேலும் தமிழ் படங்களின் வெளியீடு எதுவும் இருக்காது எனவும் கூறியுள்ளனர்.
 
எற்கனவே 2017-ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகம், போராட்டம், வேலைநிறுத்தம், FEFSI யூனியன்களுக்கிடையே பேச்சுவார்த்தை, வரிவிதிப்பு என பல்வேறு சர்சைகளை சந்தித்தது, அதே போல இந்தாண்டும் தமிழ் சினிமா பல்வேறு சர்சைகளை சந்திக்கும் என தெரிகிறது.