1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (15:34 IST)

அதர்வாவின் பட்டத்து அரசன் ரசிகர்களை திருப்தி படுத்தியதா?

அதர்வா நடித்து நேற்று ரிலீஸ் ஆன பட்டத்து அரசன் திரைப்படம் ரசிகர்களைப் பெரியளவில் ஈர்க்கவில்லை.

நடிகர் அதர்வா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் பட்டத்து அரசன். களவாணி என்ற மாபெரும் சூப்பர் ஹிட் படத்தை எடுத்த சற்குணம் தற்போது பட்டத்து அரசன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே சண்டிவீரன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான வரவேற்பைப் பெற்றது.

பட்டத்து அரசன் படத்தில் அதர்வா மற்றும் ராஜ்கிரண் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கபடியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் ராஜ்கிரண் அதர்வாவின் தாத்தாவாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று வெளியான இந்த படம் ரசிகர்களைப் பெரியளவில் ஈர்க்கவில்லை. படம் பார்த்த ரசிகர்களும் பொதுவாக நெகட்டிவ் விமர்சனங்களையே வெளிப்படுத்தி வருகின்றனர்.