திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 26 மே 2021 (17:07 IST)

பிஎஸ்பிபி பள்ளியில் நடந்ததுபோல் எனக்கும்...பிரபல நடிகை வேதனை

பிஎஸ்பிபி பள்ளியில் சமீபத்தில்  நடந்த பாலியல் தொல்லை விரகாரம்  தான் படித்துக் கொண்டிருந்த போது, அனுபவித்துள்ளதாக நடிகை தெரிவித்ஹ்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வரிடம் தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் சில ஆசிரியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டு வருவதால் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து சம்மன் அனுப்பிய காவல்துறையினர் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரிடம் நேற்று 3 மணி நேரமாக விசாரணை செய்தனர். மேலும் பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை கெளரி கிஷன் தனது டுவிட்டர் பக்கத்தில், ''பத்மா சேஷாத்ரி பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் நான் அடையாறில் படித்துக்  கொண்டிருந்த போது நடந்தது எனத் தெரிவித்துள்ளார்., அதில், சாதிக் கொடுமை, உடலை வைத்து தவறாக சித்தரிப்பது, மாணவர்கள் மீது பழிபோடுவது போன்ற செயல்களை இப்போது நினைத்தாலும் மனசு பாரமாகிறது ''எனத் தெரிவித்துள்ளார். இவருக்கு ஆதரவாக பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறது.