திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடிய வீடியோவை வெளியிட்ட நடிகர் சூரி
நடிகர் சூரி தனது சொந்த ஊர் திருவிழாவில் உறவினர்களுடன் சேர்ந்து ஒயிலாட்டம் ஆடியதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் மாப்பிள்ளை சிவகாமியின் செல்வனாக சிறப்பாக நடித்திருந்தார் சூரி. அந்த படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் நடிகர் சூரி தனது சொந்த ஊரான ராஜாக்கூரில் இருக்கும் காளியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார். திருவிழாவில் தனது உறவினர்களுடன் சேர்ந்து ஒயிலாட்டம் ஆடியபோது எடுத்த வீடியோவை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் ட்விட்டரில், என் சொந்த ஊர் ராஜாக்கூரில் காளியம்மன் கோவில் திருவிழாவில் சொந்தபந்தங்களுடன் ஒயிலாட்டம்.
சூரியின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி பதில் ட்வீட் செய்து வருகின்றனர்.