1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (15:24 IST)

தற்போது அதிரடியாய் பிக்பாஸ் வீட்டில் குதித்த நடிகர் ஹரிஸ் கல்யாண் - வீடியோ!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடி திருப்பமாக புதிய போட்டியாளராக சுஜா வருணி நேற்று வந்தார். இதையடுத்து தற்போது வெளிவந்துள்ள ப்ரொமோவில் ஒரு ஆண் போட்டியாளர் ஒருவர் வந்துள்ளார். அவர் பிக்பாஸ் வீட்டின் சுற்று சுவர் வேலியை தாண்டி குதித்து பிக்பாஸ் வீட்டில் நுழைகிறார்.

 
ஓவியா வெளியேறிய பின் பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பு போல் சுவாரசியமாக இல்லை என்று கூறி வந்த நிலையில் சமீபத்தில்  பிந்து மாதவி வருகையை அடுத்து நேற்று சுஜா வருணி, தற்போது ஹரிஸ் கல்யாண் வந்துள்ளார்.
 
ஹரிஸ் கல்யாண் சிந்து சமவெளி, அரிது அரிது, கெஸ்ட், பொறியாளன் போன்ற படங்களீல் நடித்ததன் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அவர் பசிக்கிறது ஏதாவது இருந்த கொடுங்க என்று கேட்கிறார். அவர் வெளியே நடக்கும் பல தகவல்களை வீட்டில் இருப்பவர்களுடன் பகிர்வது போல்  நிகழ்ச்சி ப்ரோமோ வெளிவந்துள்ளது. அதில் சிநேகனிடம் ஆரவ் கொடுத்தது மருத்துவ முத்தம், ஆனா நீங்க செய்வது கட்டிபுடி  வைத்தியம். அதனால இனிமே உங்களை நான் மருத்துவர் என்றுதான் அழைப்பேன் என்று கூறுகிறார்.

 
ஹரிஸ் கல்யாண் வருகை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இனி பிக்பாஸ் வீட்டில் புது முகங்களுடன், புது புது பிரச்சனைகள் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.