1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 18 மே 2021 (12:07 IST)

அப்படியெல்லாம் நடிக்க முடியாது விட்ருங்க... கிருத்திகா உதயநிதி படத்தில் விலகியது குறித்து அஷ்வின்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் அஷ்வின். இவர் பெண்களின் கனவு நாயகனாக வலம் வர துவங்கிவிட்டார். இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வீடு தேடி வந்து குவிந்துக்கொண்டிருக்கிறது.  குறிப்பாக மொத்தமாக 3 படத்துக்கு 30 லட்சம் சம்பளம் கொடுத்து கமிட் செய்துள்ளார் தயாரிப்பாளர் டிரைடண்ட் ரவீந்தரன். 
 
இதற்கிடையில் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் அவர் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. பின்னர் அந்த படத்தில் இருந்து அஷ்வின் விலகியதாகவும் அவருக்கு பதில் பிரபல மலையாள நடிகர் ஜெய்ராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக கமிட்டாகிவிட்டதாகவும் கோலிவுட்டில் செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அஷ்வின், எனக்கு இந்த கதை கேட்டதும் மிகவும் பிடித்து இருந்தது. ஆனால், படக்குழு இதனை ஒரு வெப் சீரிஸ்ஸாக எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறினர். தனக்கு வெள்ளித்திரையில் நடிகராக வரவேண்டும் என்பது தான் ஆசை எனவே இந்த படத்தில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன் என கூறிவிட்டேன் என கூலாக கூறினார். வாய்ப்புகள் வரும் போது நழுவ விடும் அஷ்வினுக்கு தொலைக்காட்சி நண்பர்கள் பலர் கும்பல் கூடி ஃப்ரீ அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.