1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 5 மே 2021 (20:15 IST)

கிருத்திகா உதயநிதி படத்தில் இருந்து அஸ்வின் நீக்கப்பட்டது உண்மையா?

வணக்கம் சென்னை, காளி ஆகிய திரைப்படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி மூன்றாவதாக ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீரென அவர் நீக்கப்பட்டு தற்போது காளிதாஸ் ஜெயராமன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அஸ்வின் தரப்பில் இதுகுறித்து கூறியபோது கிருத்திகா உதயநிதி படத்தில் நடிப்பதற்கு தான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றும் அவ்வாறு இருக்கும் நிலையில் எப்படித்தான் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என்று செய்தி வந்தது என்று எனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
 
யூடிபில் உள்ள ஒரு சிலர் தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொண்டு கற்பனையான சில செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அஸ்வின் தற்போது ரவீந்திரன் தயாரிப்பில் மூன்று திரைப்படங்கள் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் வேறு எந்த படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றும் அவரது தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
ஆரம்பத்திலிருந்தே கிருத்திகா உதயநிதி படத்தில் காளிதாஸ் ஜெயராமன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் என்பதும் தற்போது அவர் உறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது