வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (15:07 IST)

ஆசியாவின் கவர்ச்சி மங்கையாக முதலிடம் பிடித்த ப்ரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ப்ரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டுக்கு சென்று அங்கேயும் கலக்கி வரும்  நிலையில், ஆசியாவின் கவர்ச்சிக் கன்னிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் இவர், தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறார். இப்போது ஆசியாவின் கவர்ச்சி மங்கை ஆகியுள்ளார். லண்டனில் உள்ள ‘ஈஸ்ட்டர்ன்ஐ’ என்ற வார பத்திரிகை ஆசியாவில் உள்ள கவர்ச்சியான 50 பெண்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரியங்கா சோப்ரா முதல் இடம் பிடித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் தீபிகா படுகோனே. இந்த முறை அவரை பின் தள்ளிவிட்டு பிரியங்கா சோப்ரா முதல் இடத்தை பிடித்திருக்கிறார். டி.வி. நடிகை நித்யா சர்மாவுக்கு 2-வது இடமும், தீபிகாவுக்கு 3-வது இடமும்  கிடைத்திருக்கிறது. இதில் ஆலியாபட் 4-வது இடத்தை பிடித்திருக்கிறார். 5-வது இடம் பாகிஸ்தான் நடிகை மாஹிரா கானுக்கு  கிடைத்துள்ளது.
 
இது குறித்து பேசிய பிரியங்கா சோப்ரா, ஆசியாவின் கவர்ச்சி மங்கையாக தேர்ந்து எடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.  அனைவருக்கும் நன்றி என்று பேசியுள்ளார்.