1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (08:13 IST)

அஷ்வினிடம் கனி சமையலை கலாய்த்த மகள் - வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மெகா ஹிட் அடுத்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கனிக்கு காரக்குழம்பு கனி என டைட்டில் பெயரும் உருவாகியது. வாரத்தில் ஒரு நாள்  வந்தால் அது சனி ஒரு எபிசோடு விடாமல் வந்தால் அது கனி என பாலா மேடையில் பங்கமாக கலாய்த்ததெல்லாம் செய்தியாக பேசப்பட்டது. 
 
இந்நிலையில் குக் வித் கோமாளி அஷ்வின் கனி குடும்பத்தை சந்தித்து fun செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் கனியின் மகள் சோறு மட்டும் செய்துவிட்டு எப்பவும் ரசம் ஊற்றுவதாக அஷ்வினிடம் complain செய்கிறார். அதை கேட்டதும் அஷ்வினுக்கு குபீர் சிரிப்பு வந்துவிட்டது. பேசாமல் கார குழம்பு கனி என்பதை மாற்றி ரச கனி என அழைக்கலாம் போல...