வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (09:00 IST)

டெஸ்ட் தொடருக்கு இடையே அஸ்வின் பார்த்து பாராட்டிய படம்!

மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள திருஷ்யம் 2 திரைப்படத்தை அஸ்வின் பார்த்து பாராட்டியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் நேற்று வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இடையே பார்த்து பாராட்டியுள்ளார். அவரி  டிவீட்டைப் பகிர்ந்த மோகன்லால் அஸ்வினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.