1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (16:48 IST)

அசோக்செல்வன் நடிக்கும் ‘வேழம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அசோக் செல்வன் நடிக்கும் வேழம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓ மை கடவுளே மற்றும் மன்மத லீலை ஆகிய படங்களின் வெற்றியை அடுத்து அசோக் செல்வன் கவனிக்கப்படும் நடிகராகியுள்ளார். இதையடுத்து அவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி வருகின்றன. இதில் வேழம் திரைப்படம் அசோக் செல்வனின் அடுத்த ரிலீஸாக வெளிவர உள்ளது.

வரும் ஜூன் 24 ஆம் தேதி வேழம் திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சந்தீப் ஷாம் இயக்கியுள்ளார்.