வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2023 (08:43 IST)

விஷாலை ரொம்ப மிஸ் பண்றேன்… இயக்குனர் மிஷ்கின் நெகிழ்ச்சி பேச்சு!

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இருவரும் ஒருவரை ஒருவர் மேடையிலேயே தாக்கி பேசிக்கொண்டனர்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் மிஷ்கின் விஷால் மேல் இருக்கும் கோபத்தை மறந்து பல நேர்காணல்களில் விஷாலை தம்பி மாதிரி என பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் விஷால் இன்னும் மிஷ்கின் மேல் இருக்கும் கோபம் குறையாமல் பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஜி வி பிரகாஷின் அடியே திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசிய மிஷ்கின் “நான் ஒருமுறை விஷாலை பொறுக்கி என்று கூறினேன். அது நான் கோபத்தில் சொன்ன வார்த்தை. அதை எல்லோரும் அப்படியே பிடித்துக் கொண்டனர். ஆனால் விஷால் ஸ்வீட் பாய். அவருடன் இனிமேல் பணியாற்றவே மாட்டேன். கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டேன். ஆனாலும் அவர் வெற்றி பெறவேண்டும் என ஆசைப்படுகிறேன்.” எனக் கூறியுள்ளார்.