1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (07:06 IST)

தன்னுடைய ஹிட் படத்தின் இரண்டாம் பாக அப்டேட்டைக் கொடுத்த அசோக் செல்வன்!

சூதுகவ்வும் திரைப்படம் மூலமாக அறிமுகமான அசோக் செல்வன், தனி கதாநாயகனாக வெற்றியைக் கொடுத்த திரைப்படம் தெகிடி. ரமேஷ் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையில் அசோக் செல்வன், ஜனனி, ஜெயபிரகாஷ் நடிப்பில் உருவான ’தெகிடி’ திரைப்படம். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக சி வி குமார் தயாரித்திருந்தார்.

இதையடுத்து ரமேஷ் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்கள் எதுவும் வெளியாகும் ஹிட்டாகவில்லை. இந்நிலையில் இப்போது தெகிடி திரைப்படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதுகுறித்து அசோக் செல்வன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து ’ தெகிடி’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, நேற்று தான் அந்த படம் ரிலீஸ் ஆனது போல் இருக்கிறது’ என பகிர்ந்துள்ளார். மேலும் தெகிடி படத்தின் இரண்டாம் பாகத்தையும் விரைவில் எதிர்பார்க்கலாம் எனவும் அப்டேட் கொடுத்துள்ளார்.