திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 பிப்ரவரி 2024 (13:28 IST)

நடிகர் அடடே மனோகர் காலமானார்

adade manokar
பழம்பெரும் சின்னத்திரை மற்றும் சினிமா நடிகர் அடடே மனோகர் காலமானார்.
 
சென்னையைச் சேர்ந்த மனோகர், தொடக்க காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.
 
அதன்பின்னர் சினிமாவில் அறிமுகமாகி, நடிகர் விவேக், வடிவேலு உள்ளிட்டோருடன் இணைந்து  நகைச்சுவை காட்சிகளில் நடித்திருக்கிறார். இவர்,  சின்ன மாப்பிள்ளை பெரிய  மாப்பிள்ளை, கையளவு மனசு,  நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெர்சஸ் ரமணி,ரயில் சினேகம் உட்பட பல தொலைக்காட்சி தொடர்களிலும்,  25 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  குறிப்பாக எஸ்வி.சேகரின் நாடகங்களில் தவறாமல் இடம்பெற்று வந்தார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான அட்டே மனோகர் தொடரை இவரே  இயக்கி நடித்திருந்தார். எனவே அடடே மனோகர் என அழைக்கப்பட்டார்.
 
சென்னையில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி இருந்த நிலையில் நேற்று முன்தினம் காலமானார்.
 
அவர் இறுதிச் சடங்கு நேற்று  நடைபெற்றது. அவரின் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.