திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (17:30 IST)

அரவிந்த் சுவாமி படத்தைத் தயாரிக்கும் ஆர்யா!

நடிகர் ஆர்யா மற்றும் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட சிலர் ஆகஸ்ட் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

அரவிந்த்சுவாமி தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் அவர் நடித்த ரோஜா திரைப்படம் இந்தியா முழுவதும் வெற்றி பெற்றது. இதையடுத்து சாக்லேட் பாய் ஹீரோவாக வலம் வந்த அவர் குறுகிய காலத்திலேயே சினிமாவை விட்டே விலகினார். அதன் பின்னர் இப்போது மீண்டும் படங்களில் ஆர்வமாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒட்டு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் குஞ்சக்கோ போபனும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை ஆர்யா மற்றும் சந்தோஷ் சிவன் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ஆகஸ்ட் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.