சார்பட்டா 2 ஷூட்டிங் எப்போது தொடங்கும்?... ஆர்யா அப்டேட்!
ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. அந்த படத்தின் வெற்றியால் வரிசையாக தோல்விப் படங்களாகக் கொடுத்த ஆர்யாவின் மார்க்கெட் ஏறியது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
ஆனால் இப்போது பா ரஞ்சித் தங்கலான் படத்திலும், ஆர்யா தன்னுடைய வேறு சில படங்களிலும் நடித்து வருவதால் சார்பட்டா 2 திரைப்படம் பற்றி அடுத்தகட்ட நகர்வு எதுவும் நடக்கவில்லை. மேலும் படத்தைத் தயாரிக்க முதலீடு செய்ய வந்த முதலீட்டாளர்கள் பின் வாங்கிவிட்டதாலும் படம் தாமதம் ஆனதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் ஆர்யா சார்பட்டா பரம்பரை 2 படம் பற்றி பேசியுள்ளார். அதில் “சார்பட்டா 2படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும்” என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் என்ற படத்தில் வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.