ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, சத்யராஜ் – இந்திப்படம் தள்ளிவைப்பு !

Last Updated: திங்கள், 8 ஜூலை 2019 (12:37 IST)
ரஞ்சித் இயக்கும் புதியப் படத்தில் ஆர்யா மற்றும் சத்யராஜ் ஆகிய இருவரும் நடிக்க இருக்கின்றனர்.

பா ரஞ்சித் தனது முதல் படமான அட்டகத்தி மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின் மெட்ராஸ், கபாலி மற்றும் காலா என அவர் இயக்கியப் படங்களின் பேசுபொருளின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மாறினார். வரிசையாக ரஜினியை வைத்து இரண்டு படங்களை இயக்கியதால் இந்திய அளவில் புகழடைந்த ரஞ்சித் அடுத்ததாக ஹிந்தியில் பிர்சா முண்டா என்ற படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தப்படம் தள்ளிப்போவதால் அதற்குள் ஒரு தமிழ்ப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். பாக்ஸிங்கைக் கதைக்களமாக கொண்ட இந்தப்படத்தில் நடிக்க ஆர்யா மற்றும் சத்யராஜ் ஆகிய இருவரும் ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க முன்னொரு நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப்படத்தை இயக்கி முடித்தபின் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாறு சம்மந்தமான இந்திப்படத்தை இயக்க இருக்கிறார்.இதில் மேலும் படிக்கவும் :