புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (19:30 IST)

அரவிந்த்சாமியின் ‘வணங்காமுடி’: அட்டகாசமான டீசர் ரிலீஸ்

அரவிந்த்சாமியின் ‘வணங்காமுடி’: அட்டகாசமான டீசர் ரிலீஸ்
பிரபல நடிகர் அரவிந்த்சாமி நடித்த வணங்காமுடி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில் இந்த படம் ஒரு சில காரணங்களால் ரிலீசாகாமல் தாமதமாகி வருகிறது.
 
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அந்த வகையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 
 
காவல்துறை அதிகாரியாக அரவிந்த்சாமி நடித்திருக்கும் இந்த படத்தில் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் அவரை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என டீசரில் இருந்து தெரிய வருகிறது. 
 
அரவிந்த்சாமி ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ள இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம்  இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.