புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (16:09 IST)

அரவிந்த்சாமியின் ’’வணங்காமுடி’’ பட டீசர் ரிலீஸ் தேறி அறிவிப்பு

நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் வணங்காமுடி படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் 90 களின் முன்னணி நடிகராக விளங்கியவர் நடிகர் அரவிந்த். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி,படத்தில் அறிமுகமாகிம் பின்னர், அவர் இயக்கத்தில் ரோஜா, பம்பாய், மின்சாரக் கனவு, என் சுவாசக்காற்றே உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார்.

அதன்பின் சில ஆண்டுகள் தொழிலபதிபாக இருந்த நடிகர் அரவிந்த் சாமி தனி ஒருவன் படத்திற்குப் பின் மீண்டும் 2வது இன்னிங்ஸை சினிமா கேரியரில் ஆரம்பித்தார்.

பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள வணங்காமுடி படத்தின் டீசர் நாளை ரிலீஸ ஆகும் எனப்படக்குழு அறிவித்துள்ளது.

மேஜிக் பாக்ஸ் ஃபலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை செல்வா இயக்கியுள்ளார். டி இமான் இசையமைத்துள்ளார்.