திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 23 ஜூன் 2020 (13:09 IST)

சூரரைப் போற்று பாடல் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த அருண்ராஜா காமராஜ் !

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’சூரரைப்போற்று’. இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர்.

நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. spicejet boeing 737 ரக விமானத்தில் பறந்தபடியே வெய்யோன் சிலை பாடலை வெளியிட்டனர். அதையடுத்து இப்படத்திற்கு "U" சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது படத்தின் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் பேட்டி ஒன்றில் பாடல் குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அதாவது, "இளைஞர்கள் விரும்பும் வகையில் பாடல்கள் இருப்பதாகவும், மோட்டிவேஷனல் பாடலாக இருக்கும் என்றும் தெரிவித்தார். லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறந்த பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்பது கூடுதல் தகவல்.