1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 6 ஜனவரி 2024 (07:33 IST)

மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகளோடு கவனம் ஈர்க்கும் அருண் விஜய்யின் மிஷன் 1 ட்ரைலர்!

அருண் விஜய் கடந்த ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் மிஷன் 1 என்ற படத்தில் நடித்து முடித்தார். இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் பெரும்பகுதி நடந்தது. அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய வேடங்களில் நடிக்க படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை லைகா வாங்கி வெளியிடுவதாக அறிவித்தது.

ஆனால் அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆகியும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. சுமார் 30 கோடி ரூபாய் செலவில் இந்த படம் உருவாகியுள்ளதால், அந்த அளவுக்கு பிஸ்னஸ் செய்யமுடியாமல் படக்குழு தடுமாறியது. பின்னர் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றி இப்போது பொங்கலுக்கு வெளியிடுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் ஜெயில் ஒன்றுக்கு மிஷன் ஒன்றை முடிப்பதற்காக கைதி போல செல்லும் அருண் விஜய் அதை முடித்தாரா என்பதை ஆக்‌ஷன் காட்சிகள் கலந்து விறுவிறுப்பாக சொல்லியுள்ளது டிரைலர்.